Saturday, 6 January 2018

50 வயதாகியும் எஸ். ஜே சூர்யா இன்னும் திருமணம் செய்யாதது ஏன்? அவரே அளித்த தகவல்...!!


பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிப்பதில்லை என்ற தனது நீண்டநாள் விரதத்தை கலைத்தார் எஸ்.ஜே. சூர்யா. தோல்வி குறித்தும், தனது சினிமா வேட்கை குறித்து அரிதாரம் பூசாத அவரின் பேட்டியிலிருந்துஞ்



என்னை நானே இயக்கி நடிப்பதில் பெரிய விசேஷம் இல்லை. என்னை நானே இயக்கி நடித்ததில் முழுமையான நடிகனாக முடியவில்லை. அதனால், பிற இயக்குனர்களின் படத்தில் நடித்தேன். ஆனால் அந்தப் படங்கள் வெற்றி பெறவில்லை.

 எனது தோல்விகளுக்கு நானே காரணம்.மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து ஒரு வெற்றிப்படம் கொடுத்தால்தான் முழுமையான நடிகர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அதனால் நல்ல கதைக்காக ஒரு வருடம் சினிமாவிலிருந்தே ஒதுங்கி இருந்தேன்.

என்னுடைய முந்தையப் படங்கள் பெண்களிடம் வரவேற்பு பெறவில்லை. எனவே, இந்தப் படத்தில் அவர்களுக்கு பிடிக்கும் விஷயங்களை வைத்திருக்கிறோம். நான் புதிய எஸ்.ஜே. சூர்யாவாக மாறிவிட்டேன்!

சினிமா மீது எனக்குள்ள காதல் கடலளவு. நான் சினிமாவில் குறைவாகவே சாதித்திருக்கிறேன். திருமணம் செய்து கொண்டால் என்னுடைய லட்சியத்தை அடைய முடியாது.

சினிமாவில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் பிரமச்சாரியாக இருக்க முடிவு செய்துள்ளேன். என்கிறார் கேஷுவலாக.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: