Sunday, 7 January 2018

மகளுடன் டேட்டிங் செய்ய நடிகர் ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனைகள்...!!


இந்தி சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவரது மகள் சுஹானா கான். இவருக்கு தற்போது 17 வயதாகிறது. தனது மகள் குறித்து நடிகர் ஷாருக்கான் கூறும்போது,
எனது மகளுடன் யார் வேண்டுமானாலும் டேட்டிங் செல்லலாம். ஆனால் அதற்கு 7 நிபந்தனைகள் இருக்கிறது. அதாவது எனக்கு உன்னை பிடிக்காது என்பதை முதலில் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

நான் எல்லா இடத்திலும் இருப்பேன் என்பதை மறந்து விடக் கூடாது. முக்கியமாக எனது மகளுடன் டேட்டிங் செல்லும் முன்னர் ஒரு வழக்கறிஞரை வைத்து கொள். ஏனென்றால் எனது மகள் என் இளவரசி.

ரூநீ கைப்பற்றி வெற்றி கொள்ளும் பொருளல்ல. நீ எனக்கு என்ன செய்கிறாயோ, அதையேத்தான் நானும் உனக்கு செய்வேன். நான் சிறைக்கு செல்லவும் அஞ்ச மாட்டேன் என்று மிரட்டும் தொனியில் கூறுகிறார்.

அதன்பிறகு முதலில் எனது மகளுக்கு பிடித்தவனாக இருக்க வேண்டும். அவளை நீ சிரிக்க வைத்தால் நானும் உன்னை சிரிக்க வைப்பேன். துன்புறுத்தினால் நானும் உன்னை துன்புறுத்துவேன் என பாசத்தால் எச்சரித்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.

என்னதான் இருந்தாலும் அவரும் ஒரு மகளுக்கு தந்தைதானே. 

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: