Saturday, 20 January 2018

விமானத்தில் சச்சினால் நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட அவமானம்..! அப்படி என்ன நடந்தது...!!


முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினால் ஏற்பட்ட அவமானம் குறித்து நடிகர் விக்ரம் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது,

நான் ஒருநாள் மும்பையில் இருந்து சென்னைக்கு வர விமானத்தில் ஏறினேன். அப்போது என் அருகில் ஒருவர் வந்து அமர்ந்தார். அவர்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்.

சச்சினை பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம். அவர் என்னை பார்த்து ஹாய் என்று சொன்னார். ஆனால் என்னை அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

சச்சினுக்கு என்னை தெரியாததால் வருத்தமாக இருந்தது. இது குறித்து அவரிடம் கேட்டேன். அவர் நான் இந்திய படங்களை பார்ப்பதில்லை. எப்போதாவது வெளிநாட்டு படங்களை பார்ப்பேன் என்று கூறினார்.

நான் சச்சினுடன் இரண்டு மணி நேரம் பயணம் செய்தது சந்தோஷமாக இருந்தது. இந்த 2 மணி நேரமும் நாங்கள் எங்களின் மகன்களை பற்றியே பேசி கொண்டிருந்தோம் என்றார்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: