Monday, 27 November 2017

தானோட்டி வாகனங்களை பயன்படுத்துவதில் பயணியர் போக்குவரத்தை


தானோட்டி வாகனங்களை பயன்படுத்துவதில் பயணியர் போக்குவரத்தை விட சரக்குப் போக்குவரத்து துறை முந்திக்கொள்ளும் போலத் தெரிகிறது. அமெரிக்காவில் கடந்த அக்டோபர் முதல் வாரத்திலிருந்து, 'எம்பார்க்' நிறுவனத்தின் தானோட்டி லாரிகள், 'பிரிஜிடைர்' என்ற குளிர்பதன பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, 1,000 கி.மீ., துாரம் சென்று இறக்கிவிட்டு திரும்பி வர ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து, கலிபோர்னியா மாகாணம் வரையிலான இந்த பயணத்தின் துவக்கத்திலும், முடிவிலும் மனித ஓட்டுனர் தான் ஓட்டுகிறார்.

ஆனால், இடைப்பட்ட துாரத்தில் ஓட்டுனர் சும்மா அமர்ந்திருக்க, எம்பார்க் லாரி தன்னைத்தானே பத்திரமாக ஓட்டிச் செல்கிறது. அடுத்த சில ஆண்டுகள் வரை, லாரியில் ஓட்டுனர் துணைக்கு இருப்பார்.

வெள்ளோட்டம் முடிந்ததும், முழு பயணத்தையும் எங்கள் தானோட்டி லாரியே கவனித்துக் கொள்ளும் என்று அறிவித்திருக்கிறது எம்பார்க்.
சரக்கு லாரி ஓட்டுனர்களுக்கு அமெரிக்காவில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. மேலும், அனுபவமுள்ள லாரி ஓட்டுனர்கள் வயதானவர்கள் என்பதால், ஆண்டுதோறும் கணிசமானோர் ஓய்வு பெற ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தான், கூகுளின், 'வேமோ, டெஸ்லா, உபேர், வால்வோ, டெய்ம்லர்' ஆகிய பல வாகன தயாரிப்பாளர்களும், தானோட்டி லாரிகளை சாலையில் இறக்கி விடும் சோதனைகளில் மும்முரமாகியுள்ளனர்.

SHARE THIS

Author:

Likenews is a large online portal that brings Breaking Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle much more.

0 comments: